பிரித்தானியா மகாராணியின் தொண்டு நிறுவனத்தில் டிரைவர் வேலை! சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான அறிவிப்பு
பிரித்தானியா மகாராணியின் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு லொரி டிரைவர் தேவை என்ற விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, பெட்ரோல் நிறுவனங்களுக்கு, பெட்ரோலை விநியோகிக்க, லொரி ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தற்போது அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது பிரித்தானியா மகாராணியின் தொண்டு நிறுவனமான The Royal Collection நிரந்தர டெலிவரி டிரைவர் பணிக்கு ஆள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளது.
இதற்கான நேர்காணல் இந்த மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தற்போது பல நிறுவனங்களில் HGV டிரைவர்கள் தேவை அதிகம் உள்ளது.
இதனால் இந்த தொண்டு நிறுவனம் ஒரு புதிய டெலிவரி டிரைவரை தேடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. Windsor Home Park-ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த தொண்டு நிறுவனத்தில் திங்கள் முதல் ஞாயிற்றுக் கிழமை வரை என ஏதேனும் ஐந்து நாட்களில், வாரத்திற்கு 37.5 மணி நேரம் வேலை இருக்குமாம்.
இதற்காக அவர்களுக்கு ஆரம்பத்தில் 20,500 பவுண்ட சம்பளமாக கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் டிரைவர்கள் நிச்சயமாக ஒரு குடோனில் டெலிவரி மற்றும் போர்க் லிப்ட் வாகனங்களில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும், கட்டாயமாக C1 ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
இது குறித்து அந்த தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், Windsor Home Park-ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த தொண்டு நிறுவனத்தில், நீங்கள் ஆண்டிற்கு 3 மில்லியனுக்கும் அதிகமான பொருட்களைச் செயலாக்க உதவுவீர்கள்.
தங்களுக்கு மொத்தம் உள்ள ஒன்பது கடைகளுக்கு நீங்கள் வேலை செய்வீர்கள், இது ஒரு மொத்த மற்றும் இ-காமர்ஸ் வணிகம் ஆகும். எங்கள் சில்லறை கடைகள் முதல் வாடிக்கையாளர்கள் வரை, பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும்.
கடை ஆர்டர்களை எடுப்பது, ஆர்டர்களை சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பதும் மிகவும் முக்கியம். எனவே இதில் மிகவும் துல்லியமாக, கவனம் செலுத்தும் ஒரு டிரைவரை இந்த அறக்கட்டளை தேடுவதாக குறிப்பிட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள், வரும் அக்டோபர் 10-ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். இருப்பினும் இதற்கு அதிக விண்ணப்பம் வரலாம் என்பதால், இதற்கான காலியிடம் முன்பே மூடப்படலாம் என்று எச்சரிக்கப்படுவதுடன், இந்த மாதத்திலே இதற்கான நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.