பிரித்தானிய ராணியாரின் பிளாட்டினம் விழா: அவுஸ்திரேலிய புதிய பிரதமரின் அந்த ஒற்றை முடிவு
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது பிளாட்டினம் விழாவைக் கொண்டாடும் வேளையில், ராணியின் நினைவாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் முக்கிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளார்.
பிரித்தானிய ராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கியிருக்கும் நிலையில், அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரான அந்தோனி அல்பானீஸ் ஆஸ்பென் தீவுக்கு இரண்டாம் எலிசபெத் என பெயர் சூட்டுவதாக அறிவித்துள்ளார்.
இராணியாரின் பிளாட்டினம் ஜூபிலியை காமன்வெல்த் நாடுகள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளது. அந்தவகையில் அவுஸ்திரேலியா முழுவதும் கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களில் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தீவுக்கு பெயர் சூட்டும் விழாவில் 21 குண்டுகள் முழங்கவும் அவுஸ்திரேலிய விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளும் உட்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூபிலி கொண்டாட்டங்களில் அவுஸ்திரேலியர்களின் பிரதிநிதியாக கவர்னர் ஜெனரலும் அவரது மனைவியும் லண்டனில் பங்கேற்க உள்ளனர்.