புதிய சாதனை படைத்த பிரித்தானிய மகாராணியின் கிறிஸ்துமஸ் செய்தி!
பிரித்தானிய மாகாராணியாரின் கிறிஸ்துமஸ் செய்தி பிரித்தானியாவிலேயே அதிகமானோர் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியாக சாதனை படைத்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி எலிசபெத், இந்த ஆண்டு ஏப்ரலில் இளவரசர் பிலிப் இறந்த பிறகு தனது முதல் கிறிஸ்துமஸ் உரையை நேற்று வெளியிட்டார்.
ராணியின் உரை BBC மற்றும் ITC-யில் ஒளிபரப்பப்பட்டது. TRP ரேட்டிங் படி பிபிசியில் சுமார் 7.4 மில்லியன் பார்வையாளர்களும், ITVயில் 1.7 மில்லியன் பார்வையாளர்களும் இந்த உரையை பார்த்துள்ளனர்.
இதுவே தற்போது கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற சாதனையை படைத்துள்ளது.
முன்னதாக Anne-Marie-யின் ஸ்ட்ரிக்ட்லி கம் டான்ஸிங்'ஸ் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் (Strictly Come Dancing's Christmas special) நிகழ்ச்சியே 5.8 மில்லியன் பார்வைகளுடன் ரேட்டிங்கில் முத்லிடத்தைப் பிடித்திருந்தது.
சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த ஒளிபரப்பு, ராணி இதுவரை வழங்கிய மிக உணர்ச்சிகரமான உரைகளில் ஒன்றாகும்.
இந்த உரையில் அவர் தனது கணவரின் இழப்பு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடர்ச்சியான தாக்கம் உள்ளிட்ட ஆண்டின் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.
ராணியார் இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் 'ஒரு வழக்கமான சிரிப்பைக் காணவில்லை' என்றார்.
ராணியின் கிறிஸ்துமஸ் செய்தியில் "அன்பானவர்களை இழந்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் கடினமாக இருக்கும் - இந்த ஆண்டு ஏன் என்று எனக்குப் புரிகிறது," என்று அவர் கூறினார்.