இளவரசி கேட் மிடில்டனுடன் ஒரே காரில் பயணிக்காத மேகன் மெர்க்கல்: கூறப்படும் விளக்கம்
இளவரசர் எட்வர்டின் மனைவி சோஃபி, இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல்
கேட் மிடில்டனுக்கு மூத்தவராக இருக்கும் கமிலா உடன் ஒரே வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மறைந்த ராணியாரின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்துச் செல்கையில் கேட் மிடில்டனுடன் சார்லஸ் மன்னரின் மனைவி கமிலா பயணித்ததற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ராணியாரின் உடலுடன் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலத்தில் இளவரசி ஆன் மற்றும் அரச குடும்பத்து ஆண் உறுப்பினர்கள் அனைவரும் நடந்தே சென்றுள்ளனர்.
@getty
ஆனால் பெரும்பாலான பெண் அரச குடும்பத்து உறுப்பினர்கள் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வாகனத்திலேயே வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் சென்றுள்ளனர்.
இதில் இளவரசர் எட்வர்டின் மனைவி சோஃபி, இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் ஆகியோரும் அடங்கும். இதில் அரச குடும்பத்து உறுப்பினர்கள் ஒன்றாக பயணிப்பதில் ஏன் இந்த பாகுபாடு காட்டப்படுகிறது என்பதற்கு, குடும்பத்தில் மூத்தவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு மரியாதையே அது என தெரிவிக்கின்றனர்.
கேட் மிடில்டனை பொறுத்தமட்டில், சார்லஸ் மன்னராக பொறுப்புக்கு வந்துள்ளதால், அவர் இனி பட்டத்து இளவரசருக்கு மனைவி. சார்லஸுக்கு பின்னர் இளவரசர் வில்லியம் நாட்டின் மன்னராவார்.
@getty
இதனால், கேட் மிடில்டனுக்கு மூத்தவராக இருக்கும் கமிலா உடன் ஒரே வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். மட்டுமின்றி, இளவரசி சோஃபி மற்றும் மேகன் மெர்க்கல் புறப்பட்ட வாகனத்தின் அடுத்ததாக கேட் மிடில்டன் மற்றும் கமிலா பயணிக்கும் வாகனம் புறப்பட்டு சென்றுள்ளது.
குடும்பத்தில் மூத்தவர்களே அனைவருக்கும் கடைசியாக அரண்மனையில் இருந்து புறப்பட வேண்டும் என்பது விதியாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இதனாலையே, கேட் மிடில்டன் மற்றும் கமிலா ஒன்றாகவும், அடுத்த வரிசையில் இருக்கும் சோஃபி மற்றும் மேகன் மெர்க்கல் ஒன்றாகவும் பயணித்துள்ளனர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
@reuters