இளவசரர் பிலிப் இறப்பதற்கு முன் மகாராணி செய்து கொடுத்த சத்தியம்? அதுவே அவர் இப்போ இப்படி இருக்க காரணம்
இளவரசர் பிலிப் இறப்பதற்கு முன் மகாராணி அவருக்கு கொடுத்த ரகசிய வாக்குறுதி, அதாவது சத்தியம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா மகாராணியாரின் கணவரும், இளவரசருமான(Duke of Edinburgh-ன்) பிலிப் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் திகதி உயிரிழந்தார். இவர் மரணத்தை தொடர்ந்து இரண்டு வார துக்க நாட்களாக அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இறுதிச்சடங்கின் போது, மகாராணியார் மிகுந்த வேதனையுடன் இருப்பதை காண முடிந்தது. இதைக் கண்ட ஒட்டு மொத்த தேசமும் நொறுங்கிப் போனது. ஆனால், அப்படி காணப்பட்ட மகாராணியார், இளவரசர் உயிரிழந்த நான்கு நாட்களில் அரசகடமைகளுக்கு திரும்பினார்.
அதன் பின் தன்னுடைய வழக்கமான கடமைகளை செய்து வருகிறார். இது ஒரு சிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இளவரசர் உயிரிழப்பின் போது மிகுந்த வேதனையுடன் காணப்பட்ட மகாராணியார் அதில் இருந்து மீள, எப்படியும் குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று கூறப்பட்டது.
யாரும் நினைத்து பார்க்க முடியாத வகையில் நான்கு நாட்களில் அரச கடமைக்கு திரும்பினார். இதன் பின்னணி இருக்கும் ரகசியம் இப்போது தெரியவந்துள்ளது. இளவரசர் பிலிப் இறப்பதற்கு முன்பு, மகாராணியார் அவருக்கு ஒரு ரகசிய வாக்குறுதியை கொடுத்திருக்கிறர்.
இருவருமே இது போன்ற வாக்குறுதி கொடுத்துள்ளனர். இது குறித்து அரச நிபுணர் ரிச்சர்ட் கே என்பவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ள செய்தியில், இளவரசர் பிலிப் அரச கடமைகளை மற்றும் பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இருந்து ஓய்வு பெற்ற பின், அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து நேரத்தை செலவிட உதவியது.
குறிப்பாக இந்த கொரோனா காலத்தை சொல்லலாம். ஏனெனில் பிலிப் இறப்பதற்கு முன், கடைசி 13 மாதங்கள் மகாராணியாருடன் அதிக நேரத்தை செலவிட்டார். அப்போது இருவரும் இப்போது இப்படி ஒன்றாக இருக்கிறோம்,
காலப்போக்கில் யாரேனும் ஒருவருக்கு ஏதேனும் ஆகினால், இருவரில் ஒருவர் துக்கப்பட வேண்டும். ஆனால், அது வெகு நாட்களாக இருக்க கூடாது. உடனே எஞ்சிய வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
அதன் படியே இருவரும் வாக்குறுதி கொடுத்துக் கொள்ள.
தற்போது மகாராணியார் அது போலவே இளவரசர் பிலில் இறந்த சில நாட்களிலே அரச கடமைக்கு திரும்பி, சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார்.