குட்டி இளவரசி சார்லட் அரியணையேறும் வரிசையில் மகாராணியாரின் மகளையே முந்தியது எப்படி: ராஜ குடும்ப இரகசியம்
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இரண்டாவது மகள், இளவரசி ஆன். அதாவது, அவர் மன்னர் சார்லசின் தங்கை.
1950ஆம் ஆண்டு பிறந்த இளவரசி ஆன், அரியணையேறும் வரிசையில் மூன்றாவது நபராக இருந்தார். ஆனால், 1964ஆம் ஆண்டு, அவருக்கு இரண்டு தம்பிகள், அதாவது இளவரசர் ஆண்ட்ரூவும், இளவரசர் எட்வர்டும் பிறந்தபிறகு, அவர் ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
இப்போது 16ஆவது இடத்தில் இருக்கிறார் இளவரசி ஆன். ஆனால், 2015ஆம் ஆண்டு பிறந்த குட்டி இளவரசி சார்லட், அதாவது இளவரசர் வில்லியமுடைய மகள், அரியணையேறும் வரிசையில் மூன்றாவது நபராக தற்போது இருக்கிறார்.
Image: 2022 Getty Images
ஆண் பிள்ளைகளுக்குத்தான் முதலிடம்
சில நாடுகளில் இப்போதும் குடும்பங்களிலேயே ஆண் பிள்ளைகளுக்கு முதலிடம் கொடுக்கப்படுவது போல, ஒரு காலத்தில் ராஜ குடும்பத்திலும் ஆண் பிள்ளைகளுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு வந்தது.
அதனால்தான், முந்திப்பிறந்தாலும் இளவரசி ஆன் தன் தம்பிகள் பிறந்தபின் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டார்.
(Image: 2022 Max Mumby/Indigo
மகாராணியார் ராஜ குடும்ப வரலாற்றில் செய்த மிகப்பெரிய மாற்றம்
மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத், ராஜ குடும்பத்தில் பல புதுமைகளைப் புகுத்தியவர் என்றால் மிகையாகாது. அதனால்தான் ஒரு காலத்தில் பலராலும் வெறுக்கப்பட்ட கமீலா இன்று ராணி என அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம், கமீலாவை ராணி என அழைக்கவேண்டும் என மகாராணியார் மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்தான்.
அதேபோல, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அரியணையேறும் வரிசை அவர்கள் பிறந்த வரிசையிலே இருக்கவேண்டும் என்ற மாற்றத்தையும் அவர்தான் கொண்டுவந்தார்.
அதற்காக அவர் Succession to the Crown Act 2013 என்ற சட்டத்தையே கொண்டுவந்தார். அதனால்தான் 2015ஆம் ஆண்டு பிறந்த குட்டி இளவரசி சார்லட், அரியணையேறும் வரிசையில் மூன்றாவது நபராக தற்போது இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, ராஜ குடும்பத்துப் பெண்கள் மகாராணியாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
Image: Max Mumby/Indigo/Getty Images
Image: Getty