இளவரசி டயானாவை நினைவுபடுத்திய மகாராணியாரின் மரணம்: நெகிழ்ந்த இளவரசர் வில்லியம்...
மறைந்த மகாராணியாரின் சவப்பெட்டியின் பின்னால் நடந்துசென்றது, தன் தாய் இளவரசி டயானாவை நினைவுபடுத்தியதாக தெரிவித்துள்ளார் இளவரசர் வில்லியம்.
டயானா உயிரிழந்தபோது இளவரசர் வில்லியமுக்கு வெறும் 15 வயதுதான், அவரது தம்பி ஹரிக்கோ 12 வயது.
மறைந்த மகாராணியாரின் சவப்பெட்டியின் பின்னால் நடந்துசென்றது, தன் தாய் இளவரசி டயானாவை நினைவுபடுத்தியதாக தெரிவித்துள்ளார் இளவரசர் வில்லியம்.
தற்போது, தங்கள் பாட்டியாரான பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டியின் பின்னால் இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் நடந்து சென்ற காட்சி பலருக்கும் பழைய நினைவுகளைக் கொண்டு வந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
:
அப்போது இளவரசர் வில்லியமுக்கு வயது வெறும் 15தான், அவரது தம்பி ஹரிக்கோ 12 வயது!
அவ்வளவு இளம் பிராயத்தில் தங்கள் தாயைப் பறிகொடுத்துவிட்டு, அவர் எதனால் இறந்தார் என்று கூட சரியாக புரியாமல், துக்கமும் குழப்பமுமாக அன்று தங்கள் தாயின் சவப்பெட்டியின் பின்னால் தங்கள் தந்தையுடன் நடந்து சென்றார்கள் வில்லியமும் ஹரியும்.
அந்த வலி வேறெந்த வலிக்கும் இணையானது அல்ல என்று கூறியிருந்தார் இளவரசர் வில்லியம்.
Credit: Getty - Contributor
ஹரியோ, தனக்கு அன்று நிகழ்ந்தது, எக்காரணம் கொண்டும் வேறெந்தக் குழந்தைக்கும் நடக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தங்கள் பிள்ளைகள் மிகவும் சிறுவயதாக இருக்கும்போது தாங்கள் வாழ்ந்த Sandringham இல்லத்தின் முன் மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மலர்க்கொத்துக்களை இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் பார்வையிட்டார்கள்.
அப்போது மக்களுடன் உரையாடிய வில்லியம், தான் தன் பாட்டியின் சவப்பெட்டியின் பின்னால் நடந்து சென்றது, தன் தாயின் இறுதிச்சடங்கு தொடர்பான சில நினைவுகளைக் கொண்டுவந்ததாக தெரிவித்தார்.
Credit: PA
அப்போது, Caroline Barwick-Walters என்ற பெண்மணி, உங்கள் துயரத்தை நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி என்று கூறினாராம்.
உடனே வில்லியம், அவர் எல்லோருக்கும் பாட்டிதானே என்று பதிலளித்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார் Caroline.
Credit: REUTERS
Credit: AFP