ராணியாரின் இறுதிச்சடங்கின் போது... மனம் திறந்த இளவரசர் ஹரி
ராணியாரால் அரசப்பணிகளில் இருந்து வெளிப்படையாக நீக்கப்பட்ட இளவரசர் ஆண்ட்ரூ
ராணுவ உடையில் காட்சியளிக்க, இளவரசர் ஹரிக்கு அந்த அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்
ராணியாரின் இறுதிச்சடங்கின் போது தாம் ராணுவ உடை அணிவதாக இல்லை என இளவரசர் ஹரி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மாறாக, துக்கமனிசரிக்கும் மக்கள் அணியும் சாதாரண உடையையே தாம் உடுத்த இருப்பதாகவும் ஹரி தெரிவித்துள்ளார்.
@getty
இதனிடையே, ராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் அரச குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் ராணுவ உடையில் காட்சியளிக்க, இளவரசர் ஹரிக்கு அந்த அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் ஒன்று வெளியானது.
மட்டுமின்றி, ராணியாரால் அரசப்பணிகளில் இருந்து வெளிப்படையாக நீக்கப்பட்ட இளவரசர் ஆண்ட்ரூ நேற்றைய தினம் ராணுவ பதக்கங்களுடன் காட்சியளித்தார்.
@getty
இந்த நிலையிலேயே, ஹரி தொடர்பில் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருமுறை முன் வரிசையில் களப்பணியாற்றியுள்ளார் இளவரசர் ஹரி.
ஆனால் அவர் தமது அரச பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், அவர் இதுவரை ராணுவ உடையில் எந்த குடும்ப நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதில்லை.
இந்த நிலையில் தற்போது ராணியாரின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளிலும் இளவரசர் ஹரி பொதுமக்கள் அணியும் உடையையே அணிந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
@getty
மேலும், ஹரி மற்றும் ஆண்ட்ரூ தவிர எஞ்சிய அரச குடும்பத்து உறுப்பினர்கள் ஐந்து சம்பிரதாய சந்தர்ப்பங்களில் மட்டும் பயன்படுத்தக்கூடிய சீருடை அணிய அனுமதிக்கப்படுகின்றனர்.
எடின்பர்க் நகரில் அமைந்துள்ள கைல்ஸ் பேராலயம், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் வரையான ஊர்வலம், இரவு சிறப்பு அஞ்சலி கூட்டம், வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் முன்னெடுக்கப்படவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் விண்ட்சர் கோட்டையில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் என இந்த ஐந்து சம்பிரதாய சந்தர்ப்பங்களில் ராணுவ உடை பயன்படுத்த உள்ளனர்.
@getty
ஆனால், இளவசர் ஆண்ட்ரூவுக்கு இந்த ஐந்தில் ஒருமுறை மட்டும் ராணுவ சீருடை அணிந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரரான இளவரசர் ஹரிக்கு, முக்கிய நிகழ்வில் ராணுவ சீருடை மறுக்கப்பட்டுள்ளது கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
பிரித்தானிய ராணுவத்தில் கேப்டன் பதவி பெற்றிருந்த இளவரசர் ஹரி, இனி எந்த தருணத்திலும் ராணுவ சீருடை அணிய முடியாது என்பது உறுதியாகியுள்ளது.