இளவரசர் வில்லியம் குடும்பத்தின் ஹெலிகாப்டர் பயணம்! பிரித்தானியா மகாராணி கவலை?
மகாராணி இளவரசர் வில்லியம் தன்னுடைய குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் (Duke of Cambridge) வில்லியம் ஒரு தனி விமானி ஆவர்.
அவர் East Anglian Air Ambulance-ல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, RAF உடன் பயிற்சி பெற்று பணிபுரிந்தார். இதனால் அவர் சில சமயங்களில் London மற்றும் Norfolk இடையே பறப்பதற்கு ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார்.
ஏனெனில், Kensington அரண்மனை மற்றும் Norfolk-ல் வீடுகள் உள்ளதால், இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார்.
பிரித்தானியா அரச குடும்பத்தை பொறுத்த வரை, மூத்த உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வந்தது.
ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா பயணத்தின் போது, வில்லியம் தன்னுடைய குடும்பத்தினருடன் ஒன்றாக செல்லலாம் என்று அரச குடும்பத்தால் அனுமதி அளிக்கப்பட்ட பின்பு, அவர் அவ்வப்போது ஹெலிகாப்டரில் தன்னுடைய குடும்பத்தை அழைத்துச் சென்று வருகிறார்.
இது மகாராணி எலிசபெத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் தி சன் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், மகாராணியின் நெருக்கமானவர்கள் கூறியதாக குறிப்பிட்டுள்ள செய்தியில், ஹெலிகாப்டர் பயணம் ஒரு பாதுகாப்பான போக்குவரத்து வடிவம் இல்லாததால், மோசமான வானிலை நேரத்தில் வில்லியம் தன்னைத் தானே விமானியாக்கி கொண்டு பறப்பது ராணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியம் ஒரு திறமையான விமானி என்பதை அவர் அறிந்திருந்தாலும், ஒரே நேரத்தில் ஒன்றாக ஐந்து பேர் செல்வது, அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எண்ணுவதாக கூறப்படுகிறது.
தற்போது இருக்கும் இளவரசர் சார்லஸ்(73)-க்கு பின், அடுத்த படியாக அரியணை அமரப்போகும் வரிசையில் வில்லியம் உள்ளார். இதற்கு அடுத்த வரிசையில், வில்லியம் மகன் ஜார்ஜ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.