யூரோ இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்துக்கு... பிரித்தானியா மகாராணி அனுப்பிய ஸ்பெஷல் மெசேஜ் இது தான்: அதிகாரப்பூர்வ தகவல்
பிரித்தானியா மகாராணி யூரோ இறுதிப் போட்டியில் மோதவுள்ள இங்கிலாந்து அணிக்கு அரச குடும்பம் அனைவரது சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் கலந்து கொள்ளும், யூரோ 2020 கால்பந்து தொடர் கடந்த மாதத்தில் இருந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த தொடருக்கான இறுதிப் போட்டி பிரித்தானியாவின் உள்ளுர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப் போட்டி, லண்டனில் இருக்கும் வெம்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி மோதுகின்றன. கடந்த 1966-ஆம் ஆண்டுக்கு பின், அதாவது 55 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து ஒரு மிகப் பெரிய கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், ஒட்டு மொத்த தேசமும் இப்போது யூரோ கால்பந்தை தான் கவனிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியா மகாராணி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், யூரோ கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணிக்கு, ஒட்டு மொத்த அரச குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களுக்கு முன் கோப்பை வென்றது குறித்து நினைவுபடுத்திய மகாராணி, அன்று அந்த உலகக்கோப்பையை வழங்கும் போது, அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தேன்.
இந்த வெற்றி உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் பெருமை ஆகியவற்றை பதிவு செய்யும் என்று நம்புகிறேன், நாளை நடைபெறும் போட்டிக்கு என்னுடைய வாழ்த்துக்களை அனுப்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.