ஹரிக்கும் வில்லியமுக்கும் இடையில் மகாராணியார் புரோக்கர் வேலை பார்க்கப்போவதில்லை: அரண்மனை வட்டாரம் தகவல்
2019ஆம் ஆண்டு, தொலைக்காட்சி பேட்டி ஒன்றின்போது, தானும் தன் அண்ணன் வில்லியமும் வெவ்வேறு பாதையில் செல்வதாக தெரிவித்திருந்தார் ஹரி.
அதையேதான் அவரது ஓபரா பேட்டியும் மீண்டும் உறுதி செய்துள்ளது. மகனுடைய தோலின் நிறம் பிரச்சினையாக்கப்பட்டதாகவும், கேட் தன்னை அழவைத்ததாகவும் மேகன் குற்றம்சாட்டியிருந்தது அனைவரும் அறிந்ததே.
அப்போது, தங்கள் மகனுடைய தோலின் நிறம் குறித்து விமர்சித்தது யார் என தாங்கள் கூறப்போவதில்லை என்று ஹரி மேகன் தம்பதி கூறினாலும், அது மாகாராணியாரோ, இளவரசர் பிலிப்போ அல்ல என்றும் கூறியிருந்தார்கள் அவர்கள்.
இப்போதைக்கு தனக்கும் அண்ணன் வில்லியமுக்குமான உறவில் பிரச்சினை இருப்பதாகவும், காலம் எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என தான் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார் ஹரி.
இந்நிலையில், சகோதரகளுக்கிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்யப்போவது மகாராணியார் அல்ல என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
94 வயதிலும் மகாராணியார் உற்சாகமாக வலம் வந்தாலும், அவருக்கு 94 வயதாகிறது என்பது வாஸ்தவமான உண்மை.
அவர் ஹரியிடம் பேசப்போவதென்னவோ உண்மைதான், என்றாலும், அவர் ஹரிக்கும் வில்லியமுக்கும் இடையில் சமாதானம் செய்துவைப்பதற்காக புரோக்கர் வேலை பார்க்கப்போவதில்லை என்றே கூறிவிட்டார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த அந்த நபர்!

