இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின் அதே நாளில் பிரித்தானியா மகாராணியை மீளா துயரத்தில் ஆழ்த்திய மற்றொரு மரணம்!
இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின் அதே நாளில் பிரித்தானியா மகாராணியின் நெருங்கிய நண்பரும் நம்பகமான ஆலோசகருமான Sir Michael Oswald மரணமடைந்துள்ளார்.
நீண்ட நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்த Sir Michael Oswald (86) ஏப்ரல் 17ம் திகதி சனிக்கிழமையன்று இறந்தார்.
இது ஏற்கனவே துயரத்தில் இருந்து பிரித்தானியா மகாராணிக்கு மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
1970 முதல் 2002 ஆம் ஆண்டு ராணி அம்மா இறக்கும் வரை ராணி Sir Michael Oswald அவரின் பந்தய மேலாளராக பணியாற்றினார், அதன் பிறகு அவர் மகாராணிக்கு இரண்டாம் எலிசபெத்திற்கு பந்தயங்களில் ஆலோசனை வழங்கினார்.
வால்டன்-ஆன்-தேம்ஸில் பிறந்த Sir Michael, பந்தய நிகழ்வுகளில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு அருகில் இருக்கும் பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
அரச ஸ்டுட்ஸ் மேலாளர் 2020 ஆம் ஆண்டின் புத்தாண்டு கௌரவ பட்டியலில் அரச விக்டோரியன் ஆணையின் நைட் கிராண்ட் கிராஸாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.