ராணியின் சவப்பெட்டியை பார்த்து மயங்கிவிழுந்த நெருங்கிய உறவினர்! யார் அவர்?
வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் மறைந்த ராணி இலண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டியைக் கண்டதும் அவரது உறவினர் மயக்கமடைந்தார்.
அவர் மறைந்த ராணியுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ராணியின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு வந்தபோது அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மயங்கி விழுந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
அவர் யார் என்று விசாரிக்கப்பட நிலையில், ராணியின் சவப்பெட்டி உள்ளே கொண்டு செல்லப்பட்டபோது மற்ற அரச குடும்பத்தினருடன் கென்ட் இளவரசர் மைக்கேலின் மகள் லேடி கேப்ரியல்லா வின்ட்சர் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.
ஆனால், சவப்பெட்டி உள்ளே வரும்போது சில சலசலப்பு ஏற்பட்டது, அப்போது லேடி கேப்ரியெல்லா தான் மயங்கி விழுந்துள்ளார் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரது கணவர் தாமஸ் கிங்ஸ்டன் அவருக்கு உதவியுள்ளார்.
லேடி கேப்ரியல்லா சேவையின் எஞ்சிய பகுதிக்கு மீண்டும் காணப்படவில்லை, ஆனால் அவரது கணவருடன் கைகோர்த்து வெளியே நடந்துசெல்லும்போது புகைப்படம் எடுக்கப்பட்டார்.
அவர் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துடன் நெருக்கமாக இருந்தார். ராணி எலிசபெத் இளவரசர் பிலிப்புடன் 2019-ல் அவரது திருமணத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வார இறுதியில் லேடி கேப்ரியல்லா வின்ட்சர் வேறு ஏதேனும் நிகழ்வுகளில் பங்கேற்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர் திங்கள்கிழமை ராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.