மகாராணியார் மறைவுக்கு முன் கடைசியாக பேசிய வார்த்தைகள் இந்த நாட்டைக் குறித்துத்தான்...
மகாராணியார் கடைசியாக பேசிய வார்த்தைகள் எங்கள் நாட்டைக் குறித்தவைதான் என கனேடியர்கள் கூறியுள்ளார்கள்.
சமீபத்தில் கனடாவில் சகோதரர்கள் இருவர் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்ட விடயம் குறித்துதான் கடைசியாக கருத்து தெரிவித்துள்ளார் மகாராணியார்.
பிரித்தானிய மகாராணியாரின் மறைவு பிரித்தானிய மக்களை மட்டுமல்ல, அவரது ஆளுகையின் கீழிருக்கும் நாடுகளிலுள்ள மக்களையும் பெருமளவில் பாதித்துள்ளது.
ஒவ்வொருவரும், மகாராணியாருடனான தங்கள் அனுபவங்களை மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்தவண்ணம் இருக்கிறார்கள்.
அவ்வகையில், மகாராணியார் கடைசியாக பேசிய வார்த்தைகள் எங்கள் நாட்டைக் குறித்தவைதான் என கனேடியர்கள் சற்றே வருத்தத்துடன் கூறியுள்ளார்கள்.
image - cheshire
ஆம், சமீபத்தில் கனடாவில் சகோதரர்கள் இருவர் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்ட விடயம் குறித்துதான் கடைசியாக கருத்து தெரிவித்துள்ளார் மகாராணியார்.
Saskatchewanஇல் நிகழ்ந்த தாக்குதலில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து தவிப்போருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்காகவும், பெரும் இழப்புக்களை சந்தித்தவர்களுக்காகவும் கடவுளை பிரார்த்திக்கிறென்.
இந்த துயரமான நேரத்தில், கனேடியர்களுடன்கூட நானும் துக்கம் அனுஷ்டிக்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார் மகாராணியார்.
image - twitter