திருமணமான பெண்ணை சந்திக்க 460 மைல் பயணம்:பிரித்தானிய ராணியாரின் பேரனை விசாரித்த பொலிஸ்
பிரித்தானிய ராணியாரின் பேரன் பீற்றர் பிலிப்ஸ், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திருமணமான ஒரு பெண்ணைப் பார்க்க ஸ்கொட்லாந்திற்கு சென்றதாக பொதுமக்களால் புகார் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிசார் அவரை விசாரணை செய்ததுடன், அவருக்கு கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீற்றர் பிலிப்ஸ் தற்போது தமது தாயாரான இளவரசி Anne-கு சொந்தமான க்ளோசெஸ்டர்ஷையரில் உள்ள காட்கோம்ப் பார்க் எஸ்டேடில் வசித்து வருகிறார்.
பொலிசார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து, பீற்றர் பிலிப்ஸ் தொழில்முறை பயணமாகவே சென்றுள்ளதாகவும், அது கொரோனா ஊரடங்கு விதி மீறல் ஆகாது என பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
பீற்றர் பிலிப்ஸ் சந்திக்க சென்ற பெண்மணி கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருபவர் எனவும், பிலிப்ஸின் சகோதரியான சாரா பிலிப்ஸின் தோழி எனவும் தெரிய வந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பீற்றர் பிலிப்ஸ் கனேடியரான தமது மனைவி 41 வயதான Autumn என்பவரை பிரிந்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தார்.
இந்த நிலையில் 460 மைல் தொலைவில் குடியிருக்கும் குறித்த பெண்மணியை சந்திக்க கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளின் இடையே பீற்றர் பிலிப்ஸ் சென்றுள்ளார்.
பீற்றர் பிலிப்ஸின் ரேஞ்ச் ரோவர் வாகனம் நேற்று குறித்த பெண்மணியின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்ததை பொதுமக்கள் பலர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

