மேகனை திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்ட ஹரிக்கு மகாராணியார் கூறிய பதில்: திகைத்து நின்ற ஹரி!
தான் மேகனை திருமணம் செய்துகொள்ளலாமா என மகாராணியாரிடம் கேட்டபோது நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஹரி.
ராஜ குடும்ப திருமணச் சட்டம்
ராஜ குடும்பத்தைப் பொருத்தவரை, மன்னர் இரண்டாம் ஜார்ஜின் சந்ததியில் வந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டுமானால், ஆட்சி செய்பவரிடம் அனுமதி கோர வேண்டுமாம்.
அதற்காக, Royal Marriages Act 1772 என்னும் சட்டமே உள்ளது.
Image: 2018 Max Mumby/Indigo
மகாராணியாரிடம் அனுமதி கோரிய ஹரி
ஆகவே, தான் மேகனைத் திருமணம் செய்துகொள்ளலாமா என மகாராணியாரிடம் அனுமதி கேட்கச் சென்றிருக்கிறார் ஹரி. அதுவும், மேகனிடம் தன் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பே மகாராணியாரிடம் அனுமதி கேட்கச் சென்றுள்ளார் அவர்
தான் மேகன் என்னும் பெண்ணைக் மிகவும் நேசிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் மகாராணியாரிடம் கூறியுள்ளார் ஹரி.
பின்னர், நான் காதலைச் சொல்வதற்கு முன்பே உங்களிடம் அனுமதி கோரவேண்டும் என என்னிடம் சொல்லப்பட்டது என்று கூறியுள்ளார் ஹரி.
அதற்கு மகாராணியார் சொன்ன பதிலைக் கேட்டு ஹரி சற்று நேரம் குழம்பிப்போய்விட்டாராம்.
Image: 2015 Getty Images
நான் என் காதலியிடம் காதலைச் சொல்வதற்கு முன்பே உங்களிடம் அனுமதி கோரவேண்டும் என என்னிடம் சொன்னார்கள் என்று ஹரி கூற, உடனே மகாராணியார், அப்படியா? அப்படியானால் நான் சரி என்று சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன் என்றாராம்.
மகராணியார் சம்மதம் தெரிவிக்கிறாரா அல்லது கோபத்தை வெளிப்படுத்துகிறாரா, அவருக்கு பிடிக்கவில்லையா என குழம்பிப்போன ஹரி, பிறகுதான் அவர் சம்மதம் என்று சொல்லியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு மிக்க நன்றி, அற்புதம் என்று கூறினாராம்.
மகாராணியாரைப் பொருத்தவரை, அவருக்கு ஹரி மீது அவ்வளவு பிரியம். ஆகவேதான் ஹரி ஒரு விவாகரத்து பெற்ற, அமெரிக்கரான நடிகையைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியும், அவருக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனாலும், பாட்டியாரின் கடைசி நாட்களை வேதனைக்குரியவையாக மாற்றிவிட்டார்கள் ஹரியும் மேகனும்!
Image: 2018 Getty Images