"தேவதைகள் தாலாட்டு பாடட்டும்" அடக்கம் செய்த பிறகு அரச குடும்பத்தால் பகிரப்பட்ட ராணியின் அரிய புகைப்படம்!
ராணி இறுதியாக திங்கட்கிழமை இரவு ஒரு தனியார் சேவைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டார்.
ராணி அடக்கம் செய்யப்பட பிறகு அவரது நினைவாக அரச குடும்பம் அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலியை பதிவு செய்துள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைத் தொடர்ந்து, செப்டம்பர் 19, திங்கட்கிழமை மாலை வின்ட்சர் கோட்டையில் உள்ள கிங் ஜார்ஜ் VI நினைவு தேவாலயத்தில் ஒரு தனிப்பட்ட சேவைக்குப் பிறகு, ராணி இறுதியாக அடக்கம் செய்யப்பட்டார்.
அவர் தனது கணவர் இளவரசர் பிலிப், அவரது தந்தை மன்னர் நான்காம் ஜார்ஜ், அவரது தாயார் ராணி எலிசபெத் ராணியம்மை மற்றும் அவரது சகோதரி இளவரசி மார்கரெட் ஆகியோருடன் அடக்கம் செய்யப்பட்டார்.
அவர் அடக்கம் செய்யப்பட பிறகு, அரச குடும்பம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராணியின் இறுதிப் புகைப்படத்தை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.
இந்த புகைப்படம் 1971-ஆம் ஆண்டில் பால்மோரல் அருகே மூர்லேண்டில் ராணி எலிசபெத் முன்னேறிச் செல்வதை போன்று எடுக்கப்பட்ட படமாகும்.
இந்த புகைப்படத்துடன், கவிஞர் ஷேக்ஸ்பியரின் "May flights of Angels sing thee to thy rest" என்ற வரிகளை அரச குடும்பம் பதிவிட்டது. இதன் அர்த்தம், ராணி, நீங்கள் ஓய்வெடுக்க தேவதைகளின் கூட்டங்கள் தாலாட்டு பாடட்டும்" என்பதாகும்.
மேலும், "ஹெர் மெஜெஸ்டி மகாராணியாரின் அன்பு நினைவாக.1926 – 2022" என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘May flights of Angels sing thee to thy rest.’
— The Royal Family (@RoyalFamily) September 19, 2022
In loving memory of Her Majesty The Queen.
1926 - 2022 pic.twitter.com/byh5uVNDLq
