அவுஸ்திரேலியாவில் முதியவரின் காலில் சுற்றிய விஷப்பாம்பு: காப்பாற்ற முயன்ற நண்பருக்கு நேர்ந்த சோகம்
நண்பரை காப்பாற்ற முயன்று விஷப் பாம்பு கடித்ததில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விஷ பாம்பு கடித்து உயிரிழந்த முதியவர்
அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கவுமாலா அரசு பள்ளியின் 100வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 69 வயதுடைய நபரின் காலில் விஷப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டது, இதனை பார்த்த அவருடைய நண்பர் உடனடியாக விஷப்பாம்பை நண்பரின் காலில் இருந்து அகற்றும் வேலையில் ஈடுபட்டார்.
9News
அப்போது விஷப்பாம்பு அவரது கைகள் மற்றும் நெஞ்சு பகுதியில் பலமுறை கடித்தது. இதனால் அவருக்கு சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டது.
அவசர மருத்துவ முதலுதவி குழு தேவையான அனைத்து சிகிச்சைகளை செய்த நிலையிலும், விஷப்பாம்பு கடித்ததில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிர் பிழைத்த நண்பர்
இதற்கிடையில் முதலில் விஷப்பாம்பு காலில் சுற்றிய 69 வயது முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர் உடனடியாக மேக்கே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Getty
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |