மூன்றாவது பிரசவத்தில் இறந்த அவுஸ்திரேலிய பிரபலம்: சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல டாட்டூ கலைஞர் தனது மூன்றாவது பிரசவத்தில் உயிரிழந்தார்.
பிரபல டாட்டூ கலைஞர்
குயின்ஸ்லாந்தின் மிகவும் விரும்பப்படும் டாட்டூ கலைஞர் ஸ்டேசி நைட்டிங்கேல் (Stacey Nightingale).
மூன்றாவது முறையாக கருவுற்ற இவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
துரதிர்ஷ்டவசமாக மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த சிறிது நேரத்திலேயே ஸ்டேசி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடுமையாகப் போராடினார்
அவரது குடும்பத்தினர் இந்த செய்தியை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர்.
அதில், "ஸ்டேசி இந்த உலகில் ஒரு தனித்துவமான மற்றும் அழகான ஒளிக்கற்றையாக இருந்தார். அவர் தான் சந்தித்த அனைவருக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அவர் தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த சிறிது நேரத்திலேயே காலமானார். எங்களுடன் இருக்க கடுமையாகப் போராடினார், ஆனால் இறுதியில் மரணத்திற்கு மாறினார்" என தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |