ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிபோகுமா?
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகளால் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிபோகுமா என கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த சீசனில் மும்பை அணி தொடர்ச்சியாக சந்தித்த 5வது தோல்வி இதுவாகும்.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் மும்பை கடைசி இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் மும்பை இந்தியன்ஸ் அணி பும்ரா, முருகன் அஸ்வின், மில்ஸ் என சிறந்த பவுலர்களையும் கொண்டுள்ளது.
ஆனாலும் முதல் வெற்றியை பெற தடுமாறுகிறது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வி கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூட ஒரு வெற்றியை பெற்றுவிட்டது.
இதன் காரணமாக ரோகித் சர்மாவின் கேப்டன்சி மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. உதாரணமாக நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா கேப்டன்சியில் மிகவும் சொதப்பினார்.
அதாவது சுழற்பந்து வீச்சில் சிறப்பாக ஆடக்கூடியவர் மயங்க் அகர்வால் என தெரிந்தும் முருகன் அஸ்வினை பந்து வீச அழைத்தார் ரோகித். அந்த ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என மயங்க் விளாசி தள்ளினார்.
அதே போல் long-offயில் பீல்டிங் செய்துகொண்டிருந்த பொல்லார்டை, mid-offயில் பீல்டிங் செய்யுமாறு மாற்றிவிட்டார். அடுத்த பந்தே தவான் long-off திசையில் பவுண்டரி அடித்தார். இதேபோல் தான் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் ரோகித் சர்மா சொதப்பியிருந்தார்.
கேப்டன்சி மட்டுமின்றி பேட்டிங்கிலும் ரோகித் சொதப்பி வருகிறார். இந்த நிலையில் மும்பை அணியின் ஆதரவாளரான சஞ்சய் மஞ்ரேக்கர் கூட ரோகித் பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன்சியில் ரோகித் சொதப்புவது, இந்திய அணியிலும் தொடரும் என கூறப்படுகிறது. எனவே அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்து வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.