பாபர் அஸாம் விளையாடுவாரா? சூப்பர் 8யில் நியூசிலாந்திற்கு எதிராக..துடுப்பாட்டத்தை தெரிவு செய்த பாகிஸ்தான்
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
பாபர் அஸாம்
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி கொழும்பில் நடக்கிறது.
பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா (Salman Agha) நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
அவரது அணியில் ஃபஹர் ஜமான் இணைந்துள்ளார். பாபர் அஸாமும் தொடர்வதால் இம்முறை துடுப்பாட்டம் செய்வாரா என்ற கேள்வி எழுகிறது.
ஏனெனில், கடைசியாக பாகிஸ்தான் விளையாடிய போட்டியில் பாபர் அஸாம் (Babar Azam) களமிறக்கப்படவில்லை. நியூசிலாந்தை பொறுத்தவரை இஷ் சோதி, லோக்கி பெர்குசன் ஆகியோர் விளையாட உள்ளனர்.
ஆனால், தற்போது மழைபெய்ய தொடங்கியதால் ஆட்டம் தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |