இலங்கை வீரர்களுடன் சண்டையிட்ட வைபவ் சூர்யவன்ஷிக்கு தடை? ஐசிசி விதிகள் சொல்வதென்ன
இலங்கை ஏ அணி வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட வைபவ் சூர்யவன்ஷிக்கு, தடை விதித்தல் அல்லது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வைபவ் சூர்யவன்ஷி
தம்புள்ளையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தியது.
Vaibhav got into a heated argument with Sri Lankan players after the super over pic.twitter.com/wnGyEF6Nvw
— Abhi (@AbhiMSD_07) June 15, 2026
போட்டி முடிந்தபோது இலங்கை வீரர்களுடன் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இலங்கை வீரரை அவர் தள்ள, பதிலுக்கு அவரும் சூர்யவன்ஷியை தள்ள மைதானத்தில் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக, ஐசிசி-யின் நடத்தை விதிகளின் கீழ் போட்டி நடுவர் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐசிசி விதிகள் என்ன கூறுகின்றன?
வைபவ் சூர்யவன்ஷி மோதலில் ஈடுபட்ட நிகழ்வு ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.12-யின் கீழ் வரக்கூடும்.
இப்பிரிவானது, சர்வதேசப் போட்டியின்போது ஒரு வீரர், வீரர்களுக்கான உதவிப் பணியாளர், நடுவர், போட்டி நடுவர் அல்லது வேறு ஏதுனும் ஒரு நபர் மீது பொருத்தமற்ற வகையில் உடல்ரீதியாகத் தொடர்புகொள்வதை உள்ளடக்கியது.
இதன் கீழ், வேண்டுமென்றோ, பொறுப்பற்ற முறையிலோ அல்லது கவனக்குறைவாகவோ மற்றொரு வீரர் அல்லது அதிகாரியின் மீது மோதும் வகையிலோ செயல்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |