சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றின் முன் நீண்ட வரிசையில் முண்டியடித்துக்கொண்டு நின்ற மக்கள்: கவலையளிக்கவைக்கும் பின்னணி
சுவிஸ் மாகாணமொன்றில், நேற்று வீடு ஒன்றின் முன் மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்துக்கொண்டு நிற்கும் காட்சிகள் வெளியாகின.
என்ன காரணம்?
மக்கள், பிரபல இசைக்கலைஞர் ஒருவரின் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டு நிற்பது போலிருந்ததாக அவர்களில் சிலர் நகைச்சுவையாகக் கூறினர்.
சுமார் 150 மீற்றர் நீளத்துக்கு, அப்படி மக்கள் வரிசையில் நின்றது எதற்காக தெரியுமா?
அது, சூரிச் மாகாணத்தில், புதிதாக கட்டப்பட்ட ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. அதில் ஒரு வீட்டை தங்களுக்கு முன்பதிவு செய்வதற்காகத்தான் மக்கள் அவ்வளவு நீள வரிசையில் அடித்துப்பிடித்துக்கொண்டு நின்றுள்ளார்கள்.
இப்போது அந்த குடியிருப்பில் இருந்த 24 வீடுகளும் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி மக்கள் வீட்டுக்காக வரிசையில் நிற்பது ஒரு பக்கம் வேடிக்கையாக தோன்றினாலும், மறுபக்கம் அதில் கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயமும் உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பே அந்த பகுதியில் வீடு வாடகைக்குக் கிடப்பது கடினமாக இருந்தது. தற்போது, தேவை இன்னும் அதிகரித்துவிட்டது.
செல்வச் செழிப்பில் வாழும் சிலர், நான்கு அல்லது ஐந்து பேர் வாழும் ஒரு குடும்பத்துக்காக பல மாட மாளிகைகளை வாங்கிப் போடுகிறார்கள். அவற்றில் பல ஆள் இல்லாமல் வெறுமையாக கிடக்கின்றன. மறுபக்கமோ, மக்கள் குடியிருக்க வீடு தேடி அலையும் ஒரு நிலை உள்ளது என்பது கவலையை ஏற்படுத்தும் விடயம்தானே!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |