Whatsappல் ஒருவரால் நீங்கள் ப்ளாக் செய்யப்பட்டதை அறிவது எப்படி? புகைப்படங்களுடன் எளிய விளக்கம்
பெரும்பாலான சமூக ஊடகங்கள் பிளாக் விருப்ப தேர்வுடன் வருகிறது. ஏனெனில் விரும்பதகாத செயல்களில் இருந்து தப்ப மற்றும் தேவையில்லாத நபர்களிடம் இருந்து விலகி செல்ல இது உதவுகிறது.
சரி, வாட்ஸ் ஆப்பில் ஒருவர் உங்களை பிளாக் செய்து வைத்துள்ளார் என்பதை கண்டுபிடிப்பது எப்படி?
வாட்ஸ் அப் குரூப்
குறித்த நபரின் எண்ணை புதிய வாட்ஸ் அப் குழுவில் சேர்க்க முயற்சிக்கும் போது அது முடியவில்லை என்றால் அவர் உங்களை ப்ளாக் செய்துள்ளார் என அர்த்தம்.
indiatvnews
Profile photo
வாட்ஸ் ஆப்பில் யாராவது உங்களை பிளாக் செய்தால் சுயவிவரப் படம் திடீரென மறைந்துப் போகும். இதற்கான ஒரு காரணம் அவர் உங்களை பிளாக் செய்திருக்கலாம். அதே நேரம் அவர் தனது சுயவிவரப் படத்தை நீக்கியிருக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
வாட்ஸ் அப் அழைப்பு
ஒருவர் உங்களை பிளாக் செய்துவிட்டார் என்று நீங்கள் நினைத்தால் அவருக்கு அழைப்பு செய்து பாருங்கள் அது Ringing என தொடர்ந்து காட்டாமல் இருந்தால் ப்ளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.
Send Message
உங்களை வாட்ஸ் ஆப்பில் ஒருவர் பிளாக் செய்துவிட்டால் உங்களால் அவருக்கு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. இதை கண்டுபிடிக்க நீங்கள் சந்தேகப்படும் நபருக்கு ஒரு செய்தியை அனுப்பி பாருங்கள். பல மணி நேரமாக அந்த மெசேஜ் சென்று சேரவில்லையெனில் உங்களை அவர் ப்ளாக் செய்துவிட்டார் என புரிந்து கொள்ளலாம்.
WhatsApp; William Antonelli/Insider
Last seen
உங்களால் ஒருவரின் ஓன்லைன் நிலை அல்லது தொடர்பின் கடைசிப் பார்வையைப் பார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் ப்ளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.
wikihow