நான் இனவெறி பிடித்தவன் கிடையாது! என் வாழ்கையில் நடந்த கதை தெரியுமா? குயிண்ட டி காக் வேதனை
தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீரரான குயிண்டன் டி காக் தான் இனவெறி பிடித்தவன் கிடையாது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் கருப்பினத்தவர் தாக்கப்படுகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் George Floyd பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனால் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அந்த வகையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஐசிசி அனைத்து அணிகளிடமும் கூறியிருந்தது.
அதன் படி ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய ஆட்டத்தின் போது, தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீரரான குயிண்டன் டி காக் முழங்காலிட மறுத்துவிட்டார்.
இவரின் இந்த செயல் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலருக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில், இது குறித்து குயிண்டன் டி காக் அளித்துள்ள விளக்கத்தில், நான் இனவெறிக்கு ஆதரவு கொடுப்பவன் கிடையாது.
அப்படி நான் நினைத்திருந்தால் நான் எளிதாக முட்டி போட்டுவிட்டு பொய் சொல்லி இருக்க முடியும்.
நானும் சிறுவயதில் இனவெறியால் பாதிக்கப்பட்ட ஒருவன். ஏனெனில், நானும் ஒரு கலப்பின குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் எனது சகோதரிகள் வெள்ளை நிறத்தை சேர்ந்தவர்கள்.
என்னுடைய வளர்ப்பு தாயார் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர். இதனால் நான் இனவெறிக்கு ஆதரவு கொடுப்பவன் கிடையாது.
அனைவரும் சமமானவர்கள் என்பதை மட்டுமே நான் நம்புகிறேன். உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
அது தான் என்னுடைய எண்ணம், அதை புரிந்து கொள்ளுங்கள். அப்படி நான் செய்த இந்த விஷயம் யாருக்கேனும் கஷ்டமாக இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.