57 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசியும் வீண்: ஷானகா, சார்லஸ் அதிரடியில் செயின்ட் கிட்ஸ் அபார வெற்றி
Quinton de Kock blast century in cpl t20: கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் குயிண்டன் டி காக் 57 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசினார்.
வார்னர் பார்க் மைதானத்தில் நடந்த கரீபியன் டி20 போட்டியில், செயின்ட் கிட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸை வீழ்த்தியது.
கார்டர், குயிண்டன் டி காக் சிக்ஸர் மழை
கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 23வது போட்டியில், பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட் அணியில் ஸகாரி கார்டர் சிக்ஸர் மழைபொழிந்தார். அவர் 36 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 57 ஓட்டங்கள் விளாசினார்.
அடுத்து ரூதர்போர்டு 16 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுக்க, குயிண்டன் டி காக் மறுமுனையில் வாணவேடிக்கை காட்டினார்.
சிக்ஸர், பவுண்டரிகள் என பறக்கவிட்ட டி காக் 57 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.

இதன்மூலம் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 217 ஓட்டங்கள் குவித்தது. நசீம் ஷா 2 விக்கெட்டுகளும், ஹோல்டர் மற்றும் ஹசரங்கா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ருத்ரதாண்டவம் ஆடிய ஜான்சன்
பின்னர் ஆடிய செயின்ட் கிட்ஸ் அணியில் கைல் மேயர்ஸ் 29 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, ருத்ரதாண்டவம் ஆடிய ஜான்சன் சார்லஸ் (Johnson Charles) 45 பந்துகளில் 78 ஓட்டங்கள் (7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசினார்.
அடுத்து வந்த தசுன் ஷானகா அதிரடியில் மிரட்ட, ஹோல்டர் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 185 ஓட்டங்களாக உயர, ஷானகா (Shanaka) 36 (22) ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து ஆந்த்ரே ஃப்ளெட்சர் 8 பந்துகளில் 22 ஓட்டங்களும், ஹசரங்கா 4 பந்துகளில் 18 ஓட்டங்களும் விளாச, செயின்ட் கிட்ஸ் அணி 19.1 ஓவர்களில் 220 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |