ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற குயின்டன் டி காக்: பாகிஸ்தான் தொடரில் விளையாடுகிறார்
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை குயின்டன் டி காக் திரும்பப் பெற்றுள்ளார்.
டி காக்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரரான குயின்டன் டி காக் 2023ஆம் ஆண்டில் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
அதன் பின்னர் கடைசியாக அவர் 2024ஆம் ஆண்டு பார்படாஸில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியிருந்தார்.
32 வயதிலேயே டி காக் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஓய்வு முடிவை மாற்றி
இந்த நிலையில், குயின்டன் டி காக் (Quinton de Kock) தனது ஓய்வு முடிவை மாற்றியுள்ளார். அவர் அக்டோபரில் நடைபெற இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்க அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாட உள்ளது.
டி காக் 155 ஒருநாள் போட்டிகளில் 6770 ஓட்டங்களும், 92 டி20 போட்டிகளில் 2584 ஓட்டங்களும் குவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |