இந்திய அணியுடன் தோல்வி! 29 வயதில் ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர்.. ரசிகர்கள் ஷாக்
இந்திய அணியுடனான தோல்வியை அடுத்து, தென் ஆப்ரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
29 வயதான குயின்டனின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்புவதாகவும், ஒயிட் பால் கிரிக்கெட்டில் (ஒருநாள், டி20) கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் கடந்த 2014-ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
டெஸ்ட் போட்டியில் குயின்டன் டி காக் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். இருப்பினும், அணியின் மோசமான ஆட்டத்தை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
அவர் தென்னாப்பிரிக்காவுக்காக மொத்தம் 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இதில், 3300 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 6 சதங்களும், 22 அரைசதங்களும் அடித்துள்ளார். அதே நேரத்தில் டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 141 ரன்கள் எடுத்தார்.