சுந்தர் பிச்சை, நாதெல்லா வரிசையில் ரூ 440,000 கோடி நிறுவனத்தின் CEO பொறுப்புக்கு வந்த தமிழர்
கூகிள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை மற்றும் சத்யா நாதெல்லா போன்று பல இந்தியர்கள் பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான நிறுவனங்களில் CEO பொறுப்புக்கு வந்துள்ளனர்.
இந்திய வம்சாவளி நபர்
அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளார் கூகுளின் விளம்பரப் பிரிவின் முன்னாள் தலைவரான Sridhar Ramaswamy. தற்போது அவர் பல பில்லியன் டொலர் மதிப்பு கொண்ட டேட்டா கிளவுட் நிறுவனமான Snowflake-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி நபர் ஒருவர் Snowflake நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. நீண்ட 15 ஆண்டுகள் கூகிள் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவில் பணியாற்றியுள்ள ஸ்ரீதர் ராமசுவாமி, தமது குழுவின் கடின உழைப்பால் 1.5 பில்லியன் டொலர் நிறுவனத்தை சுமார் 100 பில்லியன் டொலர் என உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
சுந்தர் பிச்சை கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்ரீதர் ராமசுவாமி கூகிள் நிறுவனத்தில் இருந்து விலகினார். தனது விளம்பரமற்ற தேடுபொறியான Neeva மென்பொருளை Snowflake நிறுவனம் வாங்கியதை அடுத்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினரானார்.
6,000 பேர்கள் கொண்ட ஒரு குழு
தற்போது அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். Snowflake நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ 440,000 கோடி என்றே கூறப்படுகிறது.
AI மற்றும் ஒன்லைன் தேடல் தொழில்நுட்பத்தை கரைத்துக் குடித்துள்ள ஸ்ரீதர் ராமசுவாமி தற்போது உலகமெங்கிலும் 6,000 பேர்கள் கொண்ட ஒரு குழுவை வழிநடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்த ஸ்ரீதர் ராமசுவாமி உருவாக்கிய தேடுபொறி தான் Neeva. இதில் தேடுவதால் கூகிள் போன்று விளம்பரங்களின் தொல்லை வாடிக்கையாளர்களுக்கு இருக்காது என்றே கூறப்படுகிறது. இருப்பினும் கூகுளின் ஆதிக்கத்தை நீவாவால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதே நிதர்சனம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |