வங்கித்துறையில் கனவு வேலை... மொத்தமாக விட்டுவிட்டு ரூ 23,000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய நபர்
உலகின் பிரபலமான வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர், ரூ 23,000 கோடி மதிப்பிலான விடுமுறை முன்பதிவு தளம் ஒன்றை உருவாக்கி மிரள வைத்துள்ளார்.
மிகப் பிரபலமான நிறுவனங்களில்
தென்னிந்தியாவின் ஐதராபாத் நகரில் பிறந்த Deep Kalra டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களில் தமது பாடசாலை மற்றும் கல்லூரி காலங்களை செலவிட்டுள்ளார்.
1992ல் MBA பட்டம் பெற்ற அவர் கார்ப்பரேட் துறையில் கால்பதித்ததுடன், ABN Amro Bank and GE Capital போன்ற மிகப் பிரபலமான நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றார்.
3 ஆண்டுகள் வங்கித்துறையில் பணியாற்றிய Deep Kalra சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அந்த காலகட்டத்தில் இணைய சேவை மிக்ல வேகமாக வளர்ச்சி கண்டு வருவதையும் அவர் கவனித்துள்ளார்.
தொடர்ந்து Keyur Joshi, Rajesh Magow, மற்றும் Sachin Bhatia ஆகியோருடன் இணைந்து 2 மில்லியன் டொலர் முதலீட்டை திரட்டி MakeMyTrip என்ற நிறுவனத்தை உருவாக்கினர்.
ABN Amro வங்கியில் பணியாற்றி வந்த Deep Kalra 1995ல் மிகுந்த சவாலான முடிவை எடுத்தார். ABN Amro வங்கியில் இருந்து விலகி M.F. Bowling என்ற அமெரிக்க நிறுவனத்தில் இணைந்தார்.
சரியான வழியில் பயன்படுத்தவில்லை
அப்போது இந்த நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்கும் முடிவுடன் இருந்துள்ளது. தம்மிடம் இருந்த மொத்த சேமிப்பையும் Deep Kalra இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை அந்த நிறுவனத்தால் ஈட்ட முடியாமல் போயுள்ளது.
அப்போது தான், தமது திறமையை தாம் சரியான வழியில் பயன்படுத்தவில்லை என்பதை உணர்ந்த Deep Kalra, தமது நண்பர்கள் சிலருடன் இணைந்து கடந்த 2000 ஆண்டில் MakeMyTrip நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
2022ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் MakeMyTrip நிறுவனத்தில் 3,338 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2020 முதல் Rajesh Magow என்பவரே தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். MakeMyTrip நிறுவனத்தின் ஆண்டு வருவாய் என்பது 59.3 கோடி அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |