வெளிநாட்டில் கனவு வேலை... மொத்தமாக விட்டுவிட்டு ரூ 2,400 கோடி நிறுவனத்தை உருவாக்கிய நபர்
அமெரிக்காவில் தாம் விரும்பிய கனவு வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர், சட்டென்று மொத்தமாக அனைத்தையும் விட்டுவிட்டு இந்தியாவில் தொழில் தொடங்கி சாதித்துள்ளார் ஒருவர்.
அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலை
இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் Albinder Dhindsa. டெல்லி ஐ.ஐ.டியில் பொறியியல் பட்டம் பெற்றவர், தொடர்ந்து அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
ஆனால் ஒருகட்டத்தில் MBA பட்டம் பெறும் முடிவில் வேலையை விட்டுவிட்ட அவர், அதன் பின்னர் இந்தியாவுக்கு திரும்பினார். தொடர்ந்து Zomato நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். மிக விரைவிலேயே, டெலிவரி துறையில் உள்ள மகத்தான சாத்தியங்களை அவர் உணர்ந்தார்.
அதில் களமிறங்கும் பொருட்டு, தொழில் கற்றுக்கொள்ள தொடங்கினார். இந்த நிலையில் தான் Saurabh Kumar என்ற தனது நண்பரை சந்திக்கவும், அவருடன் இணைந்து தொழில் தொடங்கவும் முடிவு செய்தார்.
சந்தை மதிப்பு ரூ 2,400 கோடி
தொடக்கத்தில் Grofers என பெயரிடப்பட்ட இந்த நிறுவனம், ஒரு வீட்டிற்கு தேவையான அனைத்தையும், மாமிசம் முதல் பழங்கள், காய்கறிகள் மட்டுமின்றி பச்சிளம் குழந்தைகளுக்கான தயாரிப்புகளையும் நேரடியாக வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே டெலிவரி செய்யத் தொடங்கியது.
முதலில் One Number என்றும், பின்னர் Grofers எனவும் அறியப்பட்ட இந்த நிறுவனம் தற்போது Blinkit என பிரபலமடைந்துள்ளது. 2014 மே மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 2,400 கோடி என்றே தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 7,000 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டுவரும் Albinder Dhindsa-வின் மொத்த சொத்து மதிப்பு என்பது 64.6 மில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 535 கோடி) என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |