கோலிய நான் தூக்க சொன்னேனா? இவங்களுக்கு இதே வேல தாங்க!! அசிங்கப்படுத்திய அஸ்வின்
கோலி கேப்டன்சி குறித்து தான் பிசிசிஐ-யில் புகார் தெரிவித்ததாக போலி செய்தி வெளியிட்டவர்களை அஸ்வின் அசிங்கப்படுத்தியுள்ளார்.
டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி அறிவித்ததை தொடர்ந்து, சில மூத்த வீரர்கள் அவரின் தலைமையை விரும்பவில்லை என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
சில வலைத்தளங்கள், ஒரு படி மேலே சென்று அஸ்வின் தான் பிசிசிஐ-யிடம் கோலி கேப்டன்சி குறித்து புகார் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், இந்த விஷயம் குறித்து மௌனம் உடைத்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமா, விராட் கோலி கேப்டன்சி குறித்து பிசிசிஐ-க்கு எந்த புகாரும் வரவில்லை. குறிப்பிட்ட ஊடகங்களில் வெளியானது போலி செய்தி என உண்மையை உடைத்தார்.
அருண் துமாவின் விளக்கத்தை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போலி செய்தி வெளியிட்டவர்களை அஸ்வின் சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்தியுள்ளார்.
போலி செய்தி என்று அழைக்கப்படும் வலைதளத்தை நான் தேடி வருகிறேன், இது வதந்திகளுக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
அவர்களைக் கண்டுபிடித்துவிட்டேன், அவர்கள் பெயரை மாற்றிவிட்டதாக நான் கேள்விப்பட்டேன், இப்போது IANS என்று அழைக்கப்படுகிறார்கள், சிலர் அவர்களை மேற்கோள்காட்டி போலி செய்தி வெளியிட்டு வருகிறார்கள் என அஸ்வின் சாடியுள்ளார்.