'பார்ட்னர்' படத்தின் பாடலை வெளியிட்ட படக்குழு
நடிகர் ஆதி மற்றும் ஹன்சிகா மோத்வானி நடித்த 'பார்ட்னர்' படத்தின் ராத்தி பாடல் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
'பார்ட்னர்'
இந்த திரைப்படமானது இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை போன்ற பலரும் நடித்துள்ளார்கள்.
மேலும் திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தில் ஒரு ராட்டி பாடலின் வீடியோவானது தற்போது வெளியாகி இணையவாசிகள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
ராட்டி பாடல்
இந்த பாடல் 5 வருடத்திற்கு முன்பாக 7அப் மெட்ராஸ் ஆல்பத்திற்காக சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |