சிக்ஸர் மழை பொழிந்த ரச்சின் ரவீந்திரா! 35 பந்தில் 68 ரன்..முதல் அரைசதமே வாணவேடிக்கை
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடி அரைசதம் விளாசினார்.
ரச்சின் ரவீந்திரா
நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடியது. ஃபின் ஆலன் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 17 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஸ்டார்க் ஓவரில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, தொடக்க வீரர் கான்வே உடன் இணைந்தார். இருவரும் அவுஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தது.
@Getty Images
சிக்ஸர் மழை
ரச்சின் ரவீந்திரா சிக்ஸர் மழை பொழிந்து, தனது முதல் டி20 அரைசதத்தினை பதிவு செய்தார். அதன் பின்னரும் அதிரடி காட்டிய ரச்சின் 35 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
டெவோன் கான்வே 46 பந்துகளில் 63 ஓட்டங்கள் விளாசினார். இதில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின்னர் களமிறங்கிய பிலிப்ஸ் 19 (10) ஓட்டங்களும், சாப்மன் 18 (13) ஓட்டங்களும் விளாச நியூசிலாந்து அணி 215 ஓட்டங்கள் குவித்தது.
@X
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |