ஆபாச மெசேஜ்... இரவோடு இரவாக கணவர் மீது புகாரளிக்க வந்த நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி
பிரபல சின்னத்திரை நடிகையாக ரக்ஷிதா மகாலட்சுமி இரவோடு இரவாக கணவர் தினேஷ் மீது பொலிசில் புகார் அளித்த சம்பவம் நடந்துள்ளது.
பிரிவோம் சந்திப்போம் தொடரில் இணைந்து நடித்ததன் மூலம் காதல் வயப்பட்டனர் தினேஷ்- ரக்ஷிதா மகாலட்சுமி.
முதல் தொடரிலேயே அசாத்திய நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார் ரக்ஷிதா.
தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடர் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது, எத்தனை சீசன் வந்தாலும் நான் தான் மீனாட்சி என பல ஆண்டுகளாக மீனாட்சியாகவே வாழ்ந்து வந்தார்.
காதலன் தினேஷை இரு வீட்டார் சம்மதத்துடன் 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
திருமணம் முடிந்தாலும் சின்னத்திரையில் பிஸியான நடிகையாகவே வலம் வந்தார் ரக்ஷிதா, தினேசும் சீரியல்களில் நடித்து வந்தார்.
இருவரும் இணைந்து நடித்த நாச்சியார்புரம் தொடரில் நடித்தனர், இதற்கிடையே இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகின.
இருவரும் தற்காலிகமாகவே பிரிந்து இருப்பதாகவும் விரைவில் இணைந்துவிடுவோம் என நம்பிக்கையுடன் பேட்டியளித்தார் தினேஷ்.
இதற்கிடையே பிக்பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் ரக்ஷிதா மகாலட்சுமி, அப்போது கூட அவருக்கு ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு வந்தார் தினேஷ்.
இந்நிலையில் இரவோடு இரவாக தன்னுடைய கணவர் தினேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுப்பதாக சென்னை மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் தொடர்பில் தினேஷ் தரப்பில் இருந்து, விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடுவதாக முடிவெடுத்திருந்தால் செய்து கொள்ளட்டும் என கூறியதாக தெரிகிறது.
இதற்கெல்லாம் டப்பிங் ஆர்டிஸ்டான ஜிஜி தான் காரணம் என குற்றம்சாட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னர்கூட தினேஷ் அளித்த பேட்டியில், ரக்ஷிதாவின் நெருங்கிய நண்பரான ஜிஜி தான் சீரியலில் குரல் கொடுக்கிறார், இவர்கள் என்ன மாதிரியான அறிவுரை கூறுவார்கள் என தெரியாது.
கணவன்- மனைவி பிரச்சனையில் மூன்றாவது நபர்கள் தலையிட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும், அப்படித்தான் நடந்திருக்கும் என நினைக்கிறேன், அப்படி தெரியவந்தால் வீடு தேடி போயாவது கேள்வி கேட்பேன் என தெரிவித்தார்.
இதற்கு, தனக்கும், ரக்ஷிதாவுக்கும் இருப்பது தொழில் ரீதியான நட்பே தவிர வேற ஒன்றும் இல்லை, தன்னை இழிவுபடுத்திபேசினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினேஷ் மீது ஜிஜி புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |