இந்தியர் என்பதால் பிரித்தானியாவில் இனப்பாகுபாட்டை எதிர்கொண்ட பெண் கல்வியாளர்: தீர்ப்பாயம் அதிரடி
முற்காலத்தில் உலக நாடுகள் பலவற்றில் சிறுபான்மையினர் எதிர்கொண்ட இனப்பாகுபாடு குறித்து அறிந்துகொண்டதால், இப்படியெல்லாம் நிகழ்ந்ததா என நம்மில் பலர் வியந்திருக்கிறோம்.
ஆனால், நாம் வாழும் 21ஆம் நூற்றாண்டிலும் இன்னமும் ஆங்காங்கே இனப்பாகுபாடு இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பது வேதனைக்குரிய ஒரு விடயமாக உள்ளது.
இந்நிலையில், இந்தியர் என்பதால் இனப்பாகுபாட்டை எதிர்கொண்ட பெண் கல்வியாளர் ஒருவர் குறித்த ஒரு செய்தி வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர் என்பதால் இனப்பாகுபாட்டை எதிர்கொண்ட பெண் கல்வியாளர்
இங்கிலாந்திலுள்ள Portsmouth பல்கலையில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றிவந்தார் Dr காஜல் ஷர்மா ( Dr Kajal Sharma, 41) என்னும் இந்தியப் பெண் கல்வியாளர்.
2016ஆம் ஆண்டு, துறைசார் இணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் Dr காஜல். ஐந்தாண்டுகள் முடியும்போது, அவர் மீண்டும் அந்த பதவிக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
CREDIT: RICHARD DONOVAN/ALAMY
ஆனால், அந்த துறையில் மேலாளராக இருந்த பேராசிரியர் Gary Rees என்பவர், Dr காஜலுக்குத் தெரியாமல், அவரது இடத்துக்கு வேறு ஒருவரை நியமிக்க திட்டமிட்டு அதற்காக விளம்பரம் செய்துள்ளார். அனுபவம் வாய்ந்த Dr காஜலுக்கு பதிலாக, வெள்ளையரான, அனுபவமே இல்லாத Kerry Collier என்னும் பெண்ணைத் தேர்வு செய்துள்ளார் பேராசிரியர் Gary Rees.
பல்கலையில் பணி புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்த 12 பேரில், Dr காஜலை தவிர்த்து 11 பேருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெள்ளையர்கள்.
தீர்ப்பாயம் அதிரடி
இந்த விவகாரம் தொடர்பாக தீர்ப்பாயம் ஒன்று விசாரணை மேற்கொண்ட நிலையில், தனது தந்தை மரணமடைந்ததற்காக அவசரமாக இந்தியா செல்ல Dr காஜல் விண்ணப்பித்தபோது, சில பணிகளைக் கொடுத்து, அவற்றை முடித்தபிறகுதான் அவர் இந்தியா செல்லவேண்டும் என பேராசிரியர் Gary Rees வற்புறுத்தியதும், இந்தியா சென்ற Dr காஜல் தனது தந்தையின் இறுதிச்சடங்கிலிருக்கும்போது, பணி தொடர்பான கேள்விகளை மின்னஞ்சல் மூலம் பேராசிரியர் Gary Rees எழுப்பியதும் தெரியவந்தது.
சிறப்பாக பணியாற்றுபவர் என அறியபட்ட நிலையிலும், பிரசவத்துக்குப் பின் பணிக்குத் திரும்பிய Dr காஜலின் மகன் நோய்வாய்ப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருந்தபோது அவர் உதவி கோர, பேராசிரியர் Gary Rees அவருக்கு உதவி செய்ய மறுத்துள்ளார். அதே நேரத்தில், தனது துறையிலிருந்த வெள்ளையர்களுக்கு உதவிகள் செய்துள்ளார்.
ஆக, Dr காஜலுக்கெதிராக இனப்பாகுபாடு காட்டப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள தீர்ப்பாயம், அவருக்கு இழப்பீடாக 450,000 பவுண்டுகள் வழங்க உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |