புலம்பெயர்ந்தோர் மீது வெறுப்பை உமிழும் இளைய தலைமுறை? கனடாவில் ஒரு இனவெறுப்பு சம்பவம்
கடந்த சில மாதங்களாக அயர்லாந்தில் பதின்மவயதினர் இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல் நடத்துவது தொடர்ந்தவண்ணம் உள்ளது.
10 வயதே ஆன பிள்ளைகள் கூட இனரீதியாக விமர்சிப்பதைப் பார்க்கும்போது, இளைய தலைமுறைக்கும் புலம்பெயர்ந்தோர் மீது வெறுப்பு அதிகரித்துவருகிறதோ என தோன்றுகிறது.
கனடாவில் ஒரு இனவெறுப்பு சம்பவம்
இந்நிலையில், கனடாவின் ஒன்ராறியோவில், ஜூலை மாதம் 29ஆம் திகதி, ஒரு இந்திய வம்சாவளித் தம்பதி இனரீதியாக விமர்சிக்கப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
கார் பார்க்கிங்கில் நிற்கும் ஒரு இந்திய வம்சாவளித் தம்பதியரை அவ்வழியே காரில் செல்லும் சில கனேடிய இளைஞர்கள் இனரீதியாக விமர்சித்துள்ளனர்.
அந்த தம்பதி அதை தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுக்க, ஆத்திரமடைந்த அந்த இளைஞர்களில் ஒருவர், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
Some are trying to defend the driver of the truck in this disgusting hate-motivated incident in Peterborough.
— Tanya (@TanyaRanne) August 9, 2025
The driver was laughing and smiling as his buddy in the back yells another racial slur. 👇
🚨Disturbing content pic.twitter.com/k8mYJdWPlb
மேலும், அவர்களில் ஒருவர் அந்த தம்பதியரைப் பார்த்து ஆபாச சைகை காட்டியதாகவும், அவர்கள் கார் மீது தங்கள் காரைக் கொண்டு இடித்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோ கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள நிலையில், ஆகத்து மாதம் 8ஆம் திகதி, அந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |