அவரை நிறவெறியுடன் தான் நடத்தினோம்! ஏழு வீரர்கள் மீது விசாரணை.. இங்கிலாந்து கிரிக்கெட்டில் பரபரப்பு
யாக்சைர் அணிக்காக விளையாடிய அஸீம் ரஃபிக்கை நிறவெறியுடன் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், முன்னாள் வீரர்கள் உட்பட ஏழு இங்கிலாந்து வீரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் கிளப் அணியான யாக்சைரில் அஸீம் ரஃபிக் என்ற வீரர் விளையாடினார். இவர் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். அஸீம் ரஃபிக் அளித்த புகார் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட்டில் புயலை கிளப்பியுள்ளது.
யாக்சைர் அணியில் நிறவெறி இருப்பதாக தெரிவித்த ரஃபிக், அணி வீரர்கள் முதல் நிர்வாகிகள் வரை தன்னிடம் நிறவெறியுடன் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டினார். மேலும் தன்னை எப்போதும் கீழ்த்தனமாக நடத்தியதாகவும் கூறினார்.
Photo Credit: AP
இதன் காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளான அஸீம் ரஃபிக் தற்கொலைக்கு முயன்ற நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தியது. ஆனால் இந்த புகாரை முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் திட்டவட்டமாக மறுத்தார்.
Photo Credit: GETTY IMAGES
எனினும் மற்றோரு இங்கிலாந்து வீரரான கேரி பேலன்ஸ், நிறவெறியுடன் தான் அஸீம் ரஃபிக்கை நடத்தினோம் என ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, கேரி பேலன்ஸை தேசிய அணியில் எடுக்கப்போவதில்லை என்று அறிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்களான மைக்கேல் வாகன், ஹோகார்ட், பிரஸ்னன் உள்ளிட்ட 7 பேர் மீது விசாரணையை தொடங்கியுள்ளது.
அதன் பின்னர் அவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.