கனடாவில் இந்திய ஊழியர் மீது இனவெறி சம்பவம்: இணையத்தில் வெடித்த கண்டனம்
கனடாவில் உணவகம் ஒன்றில் நடந்த இனவெறி சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய ஊழியர் மீது இனவெறி சம்பவம்
கனடாவின் ஆக்வில்லில் (Oakville) உள்ள பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இந்திய ஊழியர் ஒருவரை குறிவைத்து இளைஞர் ஒருவர் இனவெறி வார்த்தைகளால் கடுமையாக திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோவில், இளைஞர் ஒருவர் இந்திய ஊழியரை பார்த்து “உன்னுடைய கம்யூனிஸ்ட் நாட்டுக்கே திரும்பிப் போ, நீ ஒரு துர்நாற்றமடிக்கும் இந்திய கழுதை என்று கடுமையான வார்த்தைகளால் கூச்சலிட்டு திட்டியுள்ளார்.

அப்போது பெண் ஒருவர் குறுக்கிட்டு இளைஞரை கேள்வி கேட்ட போது, ஆக்ரோமடைந்த இளைஞர் அதே இனவெறி வார்த்தைகளால் கடுமையாக திட்டுகிறார்.
இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில், பலர் இளைஞரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |