பிரான்ஸ் ஒலிம்பிக் நேரத்தில் கடும் இனவெறித் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ள ஒரு புலம்பெயர் பெண்
பிரான்சில், உலக சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் பெண் ஒருவர், பிரான்ஸ் ஒலிம்பிக் நேரத்தில் கடும் இனவெறித் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளார்.
இனவெறித் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ள புலம்பெயர் பெண்
பிரான்ஸ் ஒலிம்பிக் நேரத்தில் கடும் இனவெறித் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ள அந்தப் பெண் புலம்பெயர் பின்னணி கொண்டவர் ஆவார். அவரது பெயர், அயா நகமூரா (Aya Nakamura).
Vous pouvez être raciste mais pas sourd 🧏.. C’est sa qui vous fait mal ! Je deviens un sujet d’état numéro 1 en débats ect mais je vous dois quoi en vrai ? Kedal https://t.co/rgnGeAAOfD
— Aya Nakamura (@AyaNakamuraa) March 10, 2024
மாலி குடியரசில் பிறந்த அயா, 2021இல் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றார். பல மில்லியன் பேர் பின்தொடரும் பிரபல பாப் பாடகியான அயா, பிரான்சைத் தாண்டி உலகம் முழுவதும் பிரெஞ்சு மொழிப் பாடல்களைக் கொண்டு சென்ற பெருமைக்குரியவர்.
திடீரென கடும் இனவெறித்தாக்குதல்
இப்படி புகழ் பெற்றவரான அயாவைக் குறித்து ஒரு செய்தி வெளியானது. அவ்வளவுதான், ஒரு கூட்டம் இனரீதியாக அவரைக் கடுமையாகத் தாக்கத் துவங்கிவிட்டது.
அது என்ன செய்தி? அயா, பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகளின்போது இசை நிகழ்ச்சி நடத்தப்போகிறார் என்பதுதான் அந்த செய்தி.
தனது இசையால் நாட்டுக்கு பெருமை சேர்த்தபோதெல்லாம் அமைதியாக இருந்த வலதுசாரியினர், ஒலிம்பிக்கில் அயா பாடப்போகிறார் என்றதும், அவர் பிரான்சை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியற்றவர் என கூறத்துவங்க, சர்ச்சை துவங்கியுள்ளது.
அயா, பிரான்சின் மிகப் பிரபலமான பாப் ஸ்டார். ஆனால், அவர் கருப்பினத்தவர் என்பதால் சர்ச்சை துவங்கியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் அயாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இசைத்துறையினர்.
Lilian Thuram s’est exprimé sur Aya Nakamura ❤️ #SoutienAyaNakamura pic.twitter.com/DjS8oETSzy
— fan aya nakamura base (@nakamura_base) March 12, 2024