கொலை மிரட்டல் விடுத்து கொடுமைப்படுத்துகிறார்! இரண்டாவது கணவர் மீது நடிகை ராதா பரபரப்பு புகார்
இரண்டாவதாக தான் திருமணம் செய்து கொண்ட கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா மீண்டும் பரபரப்பு புகாரை கொடுத்துள்ளார்.
தமிழில் சுந்தரா டிராவல்ஸ், கேம், அடாவடி, காத்தவராயன் போன்ற படங்களில் நடித்துள்ளவர் ராதா.
தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ராதா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
பின்னர் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் சப் -இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு கடந்த ஓராண்டுக்கு மேல் சாலிகிராமத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
வசந்த ராஜாவுக்கும், ராதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஏற்கனவே காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்திருந்தார்.
அதாவது வசந்தராஜா, அவரை அடித்து துன்புறுத்தியதாக புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை செய்த போது, தன்னுடைய கணவருடன் சமாதானம் ஆகிவிட்டதாக கூறி, இருவரும் காவல் நிலையத்தில் கடிதம் எழுதி கொடுத்துவிட்டு மீண்டும் சேர்த்து வாழ துவங்கினர்.
இந்நிலையில் இந்த பிரச்சனை நடந்து 3 மாதங்களே ஆகும் நிலையில் மீண்டும் கணவர் வசந்த ராஜா மீது நடிகை புகார் கொடுத்துள்ளார்.
அதில் தொடர்ந்து வசந்தராஜா எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். நீ என்ன புகார் கொடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
பொலிசில் எழுதி தந்ததை எல்லாம் அழித்துவிட்டேன் என வசந்தராஜா கூறினார்.
எனவே வசந்தராஜாவுக்கு ஆதரவாகவும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் இளம்பருதி, பாரதி ஆகியோர் மீதும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த வசந்தராஜா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.