உதவியாளரை வைத்து அசிங்கப்படுத்திய விஜய் - குடும்பத்தை பற்றி சொன்ன வார்த்தையால் கோபமான ராதரவி
விஜய் தனது குடும்பத்தை பற்றி சொன்ன வார்த்தையால் ராதாரவி அவரை சந்திக்க மறுத்துள்ளார்.
நேரில் செல்லாத விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2024 ஆம் ஆண்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து செயல்படும் தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
இதே போல், கடந்த 27 செப்டம்பர் ஆம் திகதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நிகழ்ந்து 10 நாட்கள் ஆகியும், விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்காததை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய்யின் நடத்தை குறித்து ராதாரவி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராதாரவி
இதில் பேசிய அவர், சர்கார் படத்தில் நானும் விஜய்யும் இணைந்து நடித்தோம். அதற்கு முன்னதாக என் பேரன் தீவிர விஜய் ரசிகர் என்பதால், அவரை பார்க்க வேண்டும் என கூறினான்.
ஒருமுறை படப்பிடிப்பு நடைபெறும் போது, அவரது உதவியாளரிடம் இது குறித்து தெரிவித்தேன். ஆனால், விஜய் மேக்கப்பில் இருக்கும்போது புகைப்படம் எடுக்கமாட்டார் என கூறிவிட்டார்.
அதன் பின்னர், ஒருநாள் குடும்பத்துடன் அவரது வீட்டிற்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
அதே போல், சர்கார் பட ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக நான் மயங்கி விழுந்து விட்டேன். அப்போது விஜய் உள்ளிட்டோர் என்னை தூக்கி உதவி செய்தார்கள்.
சில நாட்கள் கழித்து அதற்கு நேரில் நன்றி தெரிவிக்க அவரது உதவியாளரிடம் கூறினேன். அதற்கு அவர், "சரி சார், விஜய் சார் வர சொல்லிவிட்டார். ஆனால் கடந்த முறை போல் கூட்டத்தை கூட்டி வர வேண்டாம் என சொல்கிறார்" என தெரிவித்தார்.
உடனே "இல்லை, நான் வரவில்லை" என கூறிவிட்டேன். அவருக்கு வேண்டுமானால் அது கூட்டமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அது குடும்பம். அதன் பிறகு நான் விஜய்யை நேரில் சந்திக்கவில்லை என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |