லண்டனின் இளம் பாடகர்... கொடூர காணொளிகளால் ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக போட்ட பகீர் திட்டம்

London Crime
By Arbin Feb 04, 2024 03:28 AM GMT
Report

வடக்கு லண்டனின் என்ஃபீல்ட் பகுதியை சேர்ந்த இளம் பாடகர் ஒருவர், கொடூர காணொளிகளால் ஈர்க்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக போட்ட பகீர் திட்டம் அம்பலமாகியுள்ளது.

பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு

என்ஃபீல்ட் பகுதியை சேர்ந்த 21 வயதான அந்த இளைஞருக்கு தற்போது நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த இளைஞரின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட இன்னொரு 17 வயது இளைஞருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

21 வயதான Al-Arfat Hassan வளரும் இளம் பாடகர். ஆனால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு, தனது பாடல்களால் அந்த அமைப்பை பெருமைப்படுத்த முயன்று வந்துள்ளார்.

இவரது பாடல்களுக்கு என சிறு ரசிகர்கள் வட்டமும் இருந்துள்ளது. ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டிருந்த காணொளிகளால் ஈர்க்கப்பட்ட அல்-அர்ஃபாத் ஹசன் இணையமூடாக வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களை வாங்கியுள்ளார்.

அத்துடன் ரசாயன தாக்குதலுக்கும் தயாராகியுள்ளார். மேலும், தற்போது தண்டனை பெற்றுள்ள இருவரும் ஐ.எஸ் அமைப்பின் காணொளிகளை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கவும், கத்தியால் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட செயல்களையும் கற்றுக்கொண்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்ல வேண்டும்

இருவர் மீதும் பயங்கரவாத தாக்குதலுக்கு தயாரானதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருவரும் பயங்கரவாத சதிச்செயலுக்கு திட்டமிட்டது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் இளம் பாடகர்... கொடூர காணொளிகளால் ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக போட்ட பகீர் திட்டம் | Radicalised Enfield Rapper Wanted Kill Thousands @pa

மேலும், தமது பாடல் மற்றும் செயற்பாடுகளால் இணையத்தில் ஒரு பெரும் இளைஞர் கூட்டத்தை தமது ஆதரவாளர்களாக திரட்டியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021ல் இருந்தே இந்த இரு இளைஞர்களும் ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கபப்ட்டுள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

காணொளி ஒன்றில், சாமுராய் வாளுடன் தோன்றும் ஹசன், ஐ.எஸ் அமைப்புக்காக உயிரையும் விடத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளான். மட்டுமின்றி ஹசனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கத்தியில் ஒன்று, ஐ.எஸ் அமைப்பினர் மரண தண்டனையை விதிக்க பயன்படுத்தும் கத்தி போன்றது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹசன் தெரிவிக்கையில், ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்ல வேண்டும் என்றும், அதற்கான ஒரு திட்டமும், செயல்படுத்த வேண்டிய இடமும் தமது மனதில் இருப்பதாகவும் விசாரணையின் போது அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளான்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US