இந்த தவறு செய்தால் தலைமுடி கொத்து கொத்தாக கொட்டும் அபாயம் உள்ளது! மக்களே உஷாரா இருங்க
Beauty tips
Hairfall
By Logeswari
தற்போது உள்ள இளைஞர்களுக்கு உள்ள பெரிய பிரச்சனைகளில் ஒன்று தலைமுடி கொட்டுவது. இது இளைஞர்களுக்கு மட்டும் இல்லாமல் பெரியவர்களுக்கும் பெரிய பிரச்சனையாக மாறி விட்டது. இதற்கு டென்ஷன், சரியான பராமரிப்பு இல்லாதது போன்ற பல காரணங்கள் உண்டு.
இது மட்டும் இல்லாமல் நாம் தெறியாமல் செய்யும் ஒரு சில தவறுகளாலும் முடி கொட்டும் அபாயம் உள்ளது. சரி வாங்க நாம் செய்யும் தவறுகள் குறித்து பார்க்கலாம்..
செய்யக்கூடாதவை:-
- சிலர் தலைமுடி ஈரமாக இருக்கும் போது சீப்பை பயன்படுத்துவார்கள். ஈரமான தலைமுடி பலவீனமான நிலையில் இருக்கும். இதுப்போன்று ஈரமான தலைமுடியில் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் தலைமுடி மோசமாக சேதமடைகிறது.
- தலைக்கு குளித்த பின் பெரும்பாலான பெண்கள் தலைமுடியை இறுக்கமாக கட்டுவார்கள். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் இம்மாதிரியான தவறுகளை அதிகம் செய்வார்கள். ஈரமான முடியை கட்டும் போது தலைமுடி அதிகம் சேதமடையும்.
- தலைக்கு குளித்த பின் உலர்த்துவதற்காக தலைமுடியை துண்டால் துடைப்போம். ஆனால் இனிமேல் அப்படி முடியை உலர்த்தாதீர்கள். ஏனெனில் இச்செயலால் தலைமுடி அதிகம் உடையும் மற்றும் அதிக சிக்கலுமாகும். உங்கள் முடியை உலர்த்த நினைத்தால் மென்மையான துணியால் தலைமுடியை ஒத்தி எடுங்கள்.
-
ஹேர் ட்ரையர் ஈரமான முடியை உலர்த்துவதற்கு தான். ஆனால் இந்த ஹேர் ட்ரையரில் இருந்து வெளிவரும் வெப்பக் காற்று பலவீனமான நிலையில் இருக்கும் ஈர முடியை சேதப்படுத்தும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US