இரும்புச்சத்து நிறைந்த ராகி சேமியா வடை!
ராகியில் வைட்டமின் டி, கால்சியம், இரும்புசத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும் உணவாக உள்ளது.
ராகி ரத்தச்சோகை வராமல் தடுக்கும், உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து. மேலும் இது உடல்சூட்டைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று.
ராகியில் சேமியா, புட்டு, கூல், களி போன்றவற்றை செய்து சாப்பிட்டுருப்போம். இனிமேல் வித்யாசமாக ராகி சேமியாவில் சத்தான வடை செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருள்
- ராகி சேமியா – 200 கிராம்
- உருளைக் கிழங்கு – 200 கிராம்
- கடலைமாவு – 25 கிராம்
- தேங்காய் துருவல் அரை கப்
- பச்சை மிளகாய் – 6
- கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை,புதினா – சிறிதளவு
- இஞ்சி – சிறிய துண்டு
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – 200 கிராம்
செய்முறை
சுடு நீரில் 1 கப் சேமியாவுக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு போட்டு வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். தண்ணீரை வடிகட்டவும்.
அடுத்து உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பிசைந்து வைக்கவும்.
பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி தழை, புதினா ஆகியவற்றை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்துப் பிசையவும்.
பின்பு மஞ்சள் தூள், தேங்காய் துருவல், கடலை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவு கலவையை எடுத்து வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.ருசியான ராகி சேமியா வடை ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |