சீமானின் விமர்சனத்தில்தான் அரசியல் என் வாழ்வில் வந்தது - ராகவா லாரன்ஸ் விளக்கம்
நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வர உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸ்
இதில் பேசிய அவர், கடமையை செய் பலனை எதிர்பாராதே. திருச்சி கிழக்கில் நான் நிற்க வேண்டுமென்றால் நான் முதலில் அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் எப்படி என் வாழ்க்கையில் வந்தது என்பதை கூறுகிறேன்.

ஜல்லிக்கட்டில் சாப்பிடு போடுகிறேன். அதன் பின்னர் சீமான் அண்ணன் என் மீது விமர்சனம் வைக்கிறார். அவருக்கு நான் டிவீட் போடுறேன். பதிலுக்கு அவர் போடுறாரு. அப்போதுதான் என் வாழ்க்கையில் அரசியல் நுழைகிறது என சீமான், ரஜினிகாந்த், முதல்வர் விஜய் குறித்து பேசியுள்ளார்.
அதன் பின்னர், "இந்தக் காணொளியைப் பார்த்த பிறகு, உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் கமெண்ட் செய்யுங்கள்.
நீங்கள் "வேண்டாம்" என்று சொன்னால், நான் அரசியலில் நுழைய மாட்டேன், சமூகத்திற்கான எனது தன்னலமற்ற சேவையைத் தொடர்வேன். ஆனால் நீங்கள் ஆம் என்று சொன்னால், நான் அரசியலில் நுழையத் தயாராக இருக்கிறேன்.
Do your duty sincerely, without expecting anything in return.
— Raghava Lawrence (@offl_Lawrence) June 12, 2026
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter… pic.twitter.com/VwPFjdaUqy
உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன், எப்போது, யாருடன் இந்தப் பயணத்தைத் தொடங்க உள்ளேன் என்பதை நான் வெளிப்படுத்துவேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |