உடலிற்கு வலு சேர்க்கும் சத்தான ராகி அடை.., இலகுவாக செய்வது எப்படி?
சத்தான ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
அந்தவகையில், சத்துக்கள் நிறைந்த ராகியில் சுவையான அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சைமிளகாய்- 4
- இஞ்சி- 1 துண்டு
- சீரகம்- 1 ஸ்பூன்
- ராகி மாவு- 2 கப்
- அரிசி மாவு- ¼ கப்
- தேங்காய்- ½ கப்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- வெள்ளை எள்ளு- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- வெங்காயம்- 1
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெள்ளை எள்ளு, உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிணைந்து கொள்ளவும்.
அடுத்து இதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து இந்த மாவை வாழையிலையில் வட்டமாக தட்டி தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுத்தால் சுவையான ராகி அடை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |