உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான ராகி பன் தோசை.., எப்படி செய்வது?
ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.
இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தினசரி உணவில் சேர்ப்பது நாள் முழுவதும் ஆற்றலைத் தந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான ராகி பன் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி- ½ கப்
- ரவை- ½ கப்
- தயிர்- ½ கப்
- எண்ணெய்- 1½ ஸ்பூன்
- கடலை பருப்பு- 2 ஸ்பூன்
- முந்திரி- 10
- கடுகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- வெங்காயம்- 1
- பச்சை மிளகாய்- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கேரட்- 1
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- உப்பு- 1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள்- ¼ ஸ்பூன்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- சமையல் சோடா- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் ராகி மாவு, ரவை, தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் மூடி போட்டு அப்படியே வைக்கவும்.
பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தோசை மாவு போல் அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு, முந்திரி, சீரகம் சேர்த்தது தாளிக்கவும்.

இதற்கடுத்து இதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, துருவிய கேரட், கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இவற்றை அரைத்த மாவில் சேர்த்து அதில் உப்பு, சமையல் சோடா மற்றும் அரிசி மாவு சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி மாவு சேர்த்து பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சத்தான ராகி பன் தோசை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |