உடல் வலுவிற்கு சத்தான ராகி சப்பாத்தி.., இலகுவாக செய்வது எப்படி?
சத்தான ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
அந்தவகையில், உடல் வலுவிற்கு சத்தான ராகி சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு- 1 கப்
- கோதுமை மாவு- 1 கப்
- உப்பு- சிறிதளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் வாணலில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
பின் இதில் ராகி மாவு சேர்த்து கலந்து 15 நிமிடம் மூடி போட்டு அப்படியே வைக்கவும்.

அடுத்து மாவை கைகள் வைத்து நன்கு பிணைந்து இதில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து மாவை சப்பாத்தி மாவு போல் தேய்த்து வைத்துக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் தவா வைத்து சப்பாத்தியை எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சத்தான ராகி சப்பாத்தி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |