கேரளாவின் பாரம்பரியமான ராகி இலை அடை.., இலகுவாக எப்படி செய்வது?
ராகி இலை அடை என்பது கேரளாவின் பாரம்பரியமான மற்றும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், கேரளாவின் பாரம்பரியமான ராகி இலை அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 1 கப்
- ராகி மாவு- ¼ கப்
- உப்பு- 1 சிட்டிகை
- நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
- தேங்காய் துருவல்- 1 கப்
- வெல்லம்- ¼ கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ராகி மாவு, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின்பு இதில் கொஞ்சம் கொஞ்சமாக சுடுதண்ணீர் சேர்த்து பிசைந்து எண்ணெய் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.

இதற்கடுத்து வாழையிலையை சிறு துண்டுகளாக வெட்டி அதில் எண்ணெய் தடவிக்கொள்ளவும்.
பின்னர் பிணைந்த மாவில் சிறிதளவு எடுத்து உருண்டையாக உருட்டி இலையில் வைத்து தட்டையாக தட்டிக்கொள்ளவும்.
தொடர்ந்து அதில் தயார் செய்த வைத்த தேங்காய் கலவையை மாவில் வைத்து இலையை மூடவும்.
இறுதியாக இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான ராகி இலை அடை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |